ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (19) மாலை கூட்டப்பட்ட விஷேட அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பான பிரேரணை நிராகரிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் பெரும்பான்மையினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து குறித்த பிரேரணை நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது
