பிரத்தியேக வகுப்பிற்குச் சென்ற பாடசாலை மாணவனின் கழுத்தை அறுத்து அவரது பையைத் திருடிய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை மீரிகம பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். கிரியுல்ல பிரதேசத்தில் வசிக்கும் மாணவர் ஒருவரே இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீரிகம பேரூந்து நிலையத்திற்கு பேருந்தில் வந்த மாணவன், வில்வத்தை நோக்கி செல்லும் புகையிரத பாதையில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த மாணவன் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மாணவனிடமிருந்து திருடப்பட்ட பை புதரில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
