இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்குள் நெருக்கடி
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் இடையிலான நெருக்கடி நிலை மேலும் மோசமடைந்துள்ளது. கடந்த காலங்களில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை கலந்தாலோசிக்காமல், ஆணைக்குழுவின் தலைவர் தீர்மானித்தமையினால் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பல தடவைகள் தலைவருக்கு தெரியப்படுத்திய போதிலும் அவர் இது தொடர்பில் பொருட்படுத்தவில்லை