Back to homepage

அண்மைய செய்திகள்

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபருக்கு மரண தண்டனை

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபருக்கு மரண தண்டனை 0

🕔15:39, 21.ஆக 2019

ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மட்டக்குளி பகுதியில் 22.54 கிரேம் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்ட நபருக்கே கொழும்பு உயர்நீதிமன்றம் இவ்வாறு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Read Full Article
பேஸ்புக் கணக்குகள் குறித்து அவதானமாக செயற்படுமாறு தேசிய கணனி அவசர பதிலளிப்பு பிரிவு எச்சரிக்கை

பேஸ்புக் கணக்குகள் குறித்து அவதானமாக செயற்படுமாறு தேசிய கணனி அவசர பதிலளிப்பு பிரிவு எச்சரிக்கை 0

🕔15:37, 21.ஆக 2019

பாதுகாப்பற்ற பேஸ்புக் கணக்குகளை ஊடுறுவுவதற்கு சில குழுக்கள் முயற்சிக்கின்றமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில் அவதானமாக இருப்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததென தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார். பேஸ்புக்கில் எமது நண்பர்களிடமிருந்து வருகின்ற ஒருவகையான லிங்க்கை நாம் க்ளிக் செய்யும்போது அது பேஸ்புக்

Read Full Article
எம்பிலிப்பிட்டிய நகர சபை விசேட ஆணையாளரின் அதிகாரத்திற்குள் வரும அறிகுறி

எம்பிலிப்பிட்டிய நகர சபை விசேட ஆணையாளரின் அதிகாரத்திற்குள் வரும அறிகுறி 0

🕔12:58, 21.ஆக 2019

எம்பிலிப்பிpட்டிய நகர சபை உறுப்பினரகளுக்கு இடையில் நிலவும் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக அதன் நிருவாகம் விசேட ஆணையாளரின் கீழ் கொண்டு வரப்படவுள்ளது. கடந்த சில மாதங்களாக எம்பிலிப்பிட்டிய நகர சபை உறுப்பினர்களுக்கு இடையில் பிளவுகள் காணப்படுகின்றன. 13 உறுப்பினர்களை கொண்ட இந்நகர சபையின் நிர்வாகம் ஸ்ரீ லங்கா பொதுஜனபெரமுனவின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேயருக்கு ஆதரவாக ஐவரும்

Read Full Article
யாழில் அமெரிக்க பிரஜையொருவரிடமிருந்து 300 அமெரிக்க டொலர்கள் கொள்ளை

யாழில் அமெரிக்க பிரஜையொருவரிடமிருந்து 300 அமெரிக்க டொலர்கள் கொள்ளை 0

🕔09:56, 21.ஆக 2019

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் அமெரிக்க பிரஜையொருவரிடமிருந்து 300 அமெரிக்க டொலர்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாப்பயணமாக வந்திருந்த அமெரிக்க பிரஜையை பின்தொடர்ந்து இரு இளைஞர்கள் அவரிடமிருந்து பணத்தினை கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Read Full Article
மழையுடனான வானிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு

மழையுடனான வானிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு 0

🕔09:53, 21.ஆக 2019

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பிரதேசங்களில் மணிக்கு 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதுடன் கொழும்பிலும் கம்பஹா மாவட்டங்களின் சில இடங்களில் மணிக்கு 50 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Read Full Article
சஹ்ரானின் மனைவி இன்று 2வது நாளாகவும் விசேட வாக்குமூலம்

சஹ்ரானின் மனைவி இன்று 2வது நாளாகவும் விசேட வாக்குமூலம் 0

🕔18:42, 20.ஆக 2019

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரான சஹ்ரான் ஹாஷிமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா சாதியா என்பவர் கோட்டை நீதவானின் உத்தியோகபூர்வ அறையில் இன்று 2வது நாளாக விசேட வாக்குமூலமளித்தார். ஒரு மணிநேரத்துக்கும் கூடுதலான காலம் வாக்குமூலமளித்த பின்னர் அப்துல் காதர் பாத்திமா சாதியா என்பவர் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பான

Read Full Article
முல்லைத்தீவு கடற்பகுதியில் கருமை நிறப்பொருட்கள் : துரித ஆய்வு

முல்லைத்தீவு கடற்பகுதியில் கருமை நிறப்பொருட்கள் : துரித ஆய்வு 0

🕔15:42, 20.ஆக 2019

முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயாறு தொடக்கம் கொக்குளாய் வரையிலான கரையோர பகுதியில் கடல் நீர் நேற்றைய தினம் பிற்பகல் தொடக்கம் கருமை நிறத்துடனாக காணப்பட்டமை தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அரிகார சபையின் பொது முகாமையாளர் டர்னி பிரதீப்குமார தெரிவித்துள்ளார். கடல் நீர் கரைக்கு வரும் பொழுது அதனுடன் கருமை நிறப்பொருட்கள் கரை ஒதுங்கியிருப்தாகவும்

Read Full Article
தெரிவுக்குழுவின் காலத்தை நீட்டிப்பதற்கான யோசனை இவ்வாரம் பாராளுமன்றத்தில்..

தெரிவுக்குழுவின் காலத்தை நீட்டிப்பதற்கான யோசனை இவ்வாரம் பாராளுமன்றத்தில்.. 0

🕔12:53, 20.ஆக 2019

உயிரித்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று பிற்பகல் 3 மணிக்கு கூடவுள்ளது. இன்றையதினம் ஜனாதிபதி நியமித்த குழுவின் உறுப்பினர்கள் சாட்சிப்பதிவுகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை குறித்த தெரிவுக்குழுவின் காலத்தை நீட்டிப்பதற்கான யோசனை இவ்வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக குழுவின் தலைவர், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இன்று பிற்பகல் ஒரு

Read Full Article
யுவதியொருவரை கடத்திச் சென்ற 11 பேர் கைது

யுவதியொருவரை கடத்திச் சென்ற 11 பேர் கைது 0

🕔12:42, 20.ஆக 2019

வவுனியாவில் யுவதியொருவரை கடத்தி சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய 11 பேர் மரத்தோடி கஞ்சனமோட்டை பகுதியில் கைது செய்யப்பட்டனர். யுவதி கிரேன்பாஸ் பகுதியிலிருந்து வவுனியாவிற்கு சென்றுள்ளார். வேன் மற்றும் இரண்டு முச்சக்கர வண்டிகளில் வருகை தந்த நபர்கள் இவ் யுவதியை கடத்திச் சென்றதுடன் புலியங்குளம் பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து வேனை சுற்றி வளைத்;தனர். யுவதியை கடத்திச் சென்ற

Read Full Article
பகிடிவதையில் ஈடுபட்ட ருஹூணு பல்கலைக்கழக மாணவர்கள் மீண்டும் விளக்கமறியலில்

பகிடிவதையில் ஈடுபட்ட ருஹூணு பல்கலைக்கழக மாணவர்கள் மீண்டும் விளக்கமறியலில் 0

🕔12:35, 19.ஆக 2019

பகிடிவதையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான ருஹூணு பல்கலைக்கழகத்தின் 19 மாணவர்களும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை எதிர்வரும் 26 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை பதில் நீதவான் ஆரியசேன பனங்கல உத்தரவிட்டுள்ளார். கடந்த 6 ம் திகதி மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர். பகிடி வதைக்கு முகங்கொடுத்த மாணவ ஒருவர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமையவே அவர்களை

Read Full Article

Default