மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வியனா கால்வாய் வீதியின் 08 ஆம் கட்டைப் பகுதிக்கு அருகில், நேற்று (2026.07.26) மாலை வேளையில் பதுளையை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கொன்கிரீட் தூண் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி, பின்னால் அமர்ந்து பயணித்தவரும் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சாரதி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மஹியங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் எனத் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
