கொங்கோவில் ஈபோலா (Ebola) வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,200 ஐக் கடந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,405 ஆக அதிகரித்துள்ளது.
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (Democratic Republic of the Congo) உறுதிப்படுத்தப்பட்ட ஈபோலா நோயாளர்களின் எண்ணிக்கை 3,200 வரை உயர்ந்துள்ளதாக எந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்த வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 1,405 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகத் தொற்றாளர்களைக் கண்டறிதல், அவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களைக் கண்காணித்தல், சிகிச்சையளித்தல் மற்றும் தடுப்பூசி செலுத்தும் திட்டங்களை மேலும் வலுப்படுத்தி வருவதாகக் கொங்கோ சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, உலக சுகாதார அமைப்புகளும் இந்த நிலைமையை தீவிரமாகக் கண்காணித்து வருவதுடன், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகக் கொங்கோ அதிகாரிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றன.
