ஸ்ரீ தலதா மளிகையின் பாதுகாப்புக்கென விசேட ஏற்பாடுகள்
Related Articles
ஸ்ரீ தலதா மளிகையின் பாதுகாப்புக்கென விசேட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தலதா மாளிகைக்குள் வருகை தருவதை கருத்திற்கொண்டு பாதுகாப்பு நவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தலதா மளிகையின் தியவடன நிலைமை பிரதிப் நிலங்க தேல தெரிவித்துள்ளார். மாளிகைக்குள் வருவதற்கு முன்னர் முகம், கைகால்களை கழுவி விட்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கிருமிகளை அழிக்கும் மருந்து வகையொன்றை வழங்கியதன் பின்னரே மக்கள் மாளிகைக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். நோய் தொற்று ஏற்படாமல் இருப்பதற்கு மேற்கொண்டுள்ள பாதுகாப்பு எற்பாடுகள் காரணமாக மாளிகைக்குள் வரும் பக்தர்கள் அச்சமின்றி குறித்த சுழலில் நடமாட முடியுமென தலதா மளிகையின் தியவடன நிலைமை பிரதிப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.