தலிபான் கிளர்ச்சியாளர்கள் ஆயிரத்து 500 பேரை சிறையிலிருந்து விடுவிப்பதற்கு ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கனி அனுமதியளித்துள்ளார். தலிபான் அமைப்பினருடனான சமாதானப் பேச்சுவார்த்தையை அடுத்து குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இநிலையில் விடுவிக்கப்படும் அனைத்துப் போராளிகளும் தாம் மீண்டும் மோதல்களில் ஈடுபடப்போவதில்லை என்ற எழுத்துமூல உத்தரவாதத்தினை வழங்கவேண்டுமென ஐனாதிபதி கோரியுள்ளார். இதேவேளை தமது கட்டுப்பாட்டிலுள்ள ஆயிரம் அரச படையினரை விடுவிப்பதற்கு தலிபான் அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.

தலிபான் கிளர்ச்சியாளர்கள் ஆயிரத்து 500 பேரை சிறையிலிருந்து விடுவிப்பதற்கு ஆப்கான் ஜனாதிபதி அனுமதி
படிக்க 0 நிமிடங்கள்