நாட்டின் முதலாவது ஒளடத உற்பத்தி கிராமத்தை ஹம்பாந்தோட்டையில் ஆரம்பிக்க போவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதன்மூலம் 17 ஆயிரத்துக்கும் கூடுதலானோருக்கு தொழில் வாய்ப்புக்கள் கிடைப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
‘”ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை போன்று ஹம்பாந்தோட்டை நகர சபையையும் பிரதேச சபையையும் அபிவிருத்தி செய்யப்படும். இந்நாட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள இரண்டாவது பொருளாதார கேந்திர நிலையமாக அடுத்து ஐந்து வரும் ஆண்டுகளுக்கு உங்களது பகுதி மாற்றியமைக்கப்படும். இதனை நாம் நிச்சயம் நிறைவேற்றுவோம். இலங்கையின் முதலாவது மருந்து உற்பத்தி கிராமத்தை ஹம்பாந்தோட்டையில் ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பம் எமக்குள்ளது. அடுத்து வரும் காலப்பகுதிக்குள் இதனை நாம் ஆரம்பிப்போம். 15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை வெளிநாட்டு கம்பனி ஒன்றுக்கு விற்க முயற்சித்த போது ஆர்ப்பாட்டங்களை நடத்தி அதனை நாம் மீட்டு எடுத்தோம். அதில் 5000 ஏக்கர் நிலப்பரப்பில் முதலீடுகளை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்றது. ஹம்பாந்தோட்டை முழு நாட்டு மக்களின் நலன்கருதியே முன்னேற்றப்படுகின்றது. ஹம்பாந்தோட்டை நகர சபையிலும் பிரதேச சபை பிரவுகளிலும் வாழ்கின்ற மக்களுக்கு இதற்குரிய சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். இதற்கு இப்பகுதியில் உள்ள பிள்ளைகளை நாம் தயார்ப்படுத்த வேண்டும். இவ்வாறான அபிவிருத்தி திட்டங்களை இப்பகுதியில் மாத்திரமல்ல, முழு நாட்டிலும் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.
ஹம்பாந்தோட்டை சிங்கபூர் மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் சமல் ராஜபக்ஷவும் இதன்போது கருத்து வெளியிட்டார்.
“”இம்மாவட்டத்துக்கு நீரை பெற்று கொள்வதற்காக நீர்பாச திட்டங்கள் பலவற்றை அறிமுகப்படுத்தினோம். உமா ஓயா நீர்பாசனத்திட்டத்தின் மூலம் வெள்ளவாய மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளுக்கு அடுத்து வரும் ஜனவரி மாதம் முதல் பெற்று கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். ஜின் மற்றும் நில்வளா நீர்பாசன திட்டங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் இடைநிறுத்தப்பட்டன. மீண்டும் அவை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இப்பிரதேச மக்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு தேவையான நீர் அத்துடன் ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்படவுள்ள பாரிய அளவிலான கைத்தொழிற்சாலைகளுக்கும் தேவையான நீரை பூரணமாக வழங்க முடிகின்றது. நாம் தூர சிந்தனையுடனான நோக்கங்களின் அடிப்படையிலேயே திட்டங்களை ஆரம்பித்தோம். “‘
