நாட்டின் பல பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பல துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.
கம்பஹா கோணஹேன முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய கிரிந்திவிட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது 12 துப்பாக்கிகள் 4 ரவைகள் உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன. 58 வயதுடைய சந்தேகநபர் கம்பஹா பகுதியை வசிப்பிடமாக கொண்டவர்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவரை தெனியாய விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஹிங்குரஹேன கிரிவெல்லதொல பகுதியிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். 40 வயதுடைய இவர் தெனியாய பகுதியை வசிப்பிடமாக கொண்டவர். அத்துடன் தெனியாய விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த மற்றுமொரு தகவலுக்கு அமைய மற்றுமொரு துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து ஏழு ரவைகள் கண்டெடுக்கப்பட்டன. 59 வயதுடைய இவர் வெங்கமுவ பகுதியை வசிப்பிடமாக கொண்டவர்.
