அடிப்படை வாதிகளுக்கு தலைதூக்க இடமளிக்கப் போவதில்லையென ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திபின் போதே அவர் இதனை தெரிவித்தார். மக்களின் பாதுகாப்பு மற்றும் தேசிய நல்லிணகத்தை முன்னிரையாக கொண்டு தான் செயற்படவுள்ளதாகவும் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்றிருக்காவிடின் எமது நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் எவரும் கதைத்திருக்க மாட்டார்கள் தாக்குதல் இடம்பெற்று இரண்டு நாட்களுக்கு பின்னர், தான் இருந்திருந்தால் இத்தாக்குதலை தடுத்திருப்பேன் என கோட்டாப்பாய ராஜபக்ஷ தெரிவித்தார். அடுத்த நாள் தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அவர் குறிப்பிட்டார். அடுத்த நாள் தான் வந்தவுடன் அடிப்படை வாதத்தை இல்லாது செய்வதாக குறிப்பிட்டார். ஆனால் சில தினங்களுக்கு முன்னர் அவர்களுக்கு ஆதரவாக இருந்த தயான் ஜயதிலக்க ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். இவர்களே இதனை திட்டமிட்டிருக்கலாமென அவர் குறிப்பிட்டதாக அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
