சிறுவர்களை பாதுகாப்பதற்காக பொதுமக்களுக்கு செய்தியொன்றை வழங்கும் வகையில் ஸ்டிக்கர் ஒன்றை வாகனங்களில் ஒட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிரான தினத்தை ஒட்டியே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சிறுவர் துஸ்பிரயோகம் குறித்து பொதுமக்களை அறிவுறுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட ஸ்டிக்கரை வாகனங்களில் ஒட்டும் செயற்பாடு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அருகாமையில் முன்னெடுக்கப்பட்டது. இதில் தலைவர் பேராசிரியர் முதித்த விதான பத்திரண மற்றும் பிரதி தலைவரும் மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான சுஜாதா அழகப்பெரும உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.