fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கட் அணிக்கு எதிரான விசாரணைகள் துரிதம்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 23, 2019 12:46

ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கட் அணிக்கு எதிரான விசாரணைகள் துரிதம்

ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கட் அணியின் மீது முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்போது இச்சம்பவம் தொடர்பில் நான்கு வீரர்கள் போட்டித்தடைக்குள்ளாகியுள்ளனர். சர்வதேச கிரிக்கட் சபையின் விதிமுறைகளை மீறியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அணியின் தலைவர் மொஹமட் நதீமும் போட்டித் தடைக்குள்ளாகியுள்ளார். எவ்வாறெனினும் உலக கிண்ண 20 – 20 கிரிக்கட் தொடர் அடுத்தவருடம் அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கான தெரிவுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இச்சந்தர்ப்பத்தில் அவ்வணியின் முக்கிய 4 வீரர்கள் போட்டித் தடைக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னர் இதுதொடர்பான விசாரணைகளை நிறைவு செய்யவுள்ளதாக ஐ.சி.சி ஊழல் ஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 23, 2019 12:46

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க