அரசாங்க நிதியை தவறாக பயன்படுத்திய வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, இடம்பெயர்ந்த மக்களுக்கு வாக்களிப்பதற்காக போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக இலங்கை போக்குவரத்துச் சபையின் பேரூந்துகளை அனுப்பியதன் மூலம் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் சிலர் அரசாங்க நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இந்நிலையில் குறித்த வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
