நள்ளிரவில் வீடு புகுந்து நடத்திய தாக்குதலில் வைத்திய தம்பதிகள் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா வைரவப் புளியங்குளம் பகுதியில் வைத்தியத் தம்பதியின் வீட்டில் புகுந்த இனந்தெரியாத நபர்கள் நடாத்திய தாக்குதலில் கணவனும் மனைவியும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இன்று அதிகாலை 12.30 மணியளவில் வீட்டில் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் உறங்கிக் கொண்டிருந்த வைத்தியத் தம்பதியினரை கம்பியால் தாக்கி அவர்களின் கைத்தொலைபேசி, பணப்பை, சைக்கிள் திறப்பு, கைக்கடிகாரம், சீசீரீவீ சேமிப்பு பெட்டகம் என்பவற்றை எடுத்துச் சென்றுள்ளதுடன் வீட்டிலிருந்த தொலைக்காட்சி, சீசீரீவீ கமரா ஆகியவற்றை சேதப்படுத்தியுள்ளனர். வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
