அமானுஷிய சக்தியொன்றை விரட்டுவதாக கூறி பிரம்பால் தாக்கப்பட்டு உயிரிழந்த வேவல்வத்த கந்துகொட பகுதியைச் சேர்ந்த 9 வயதான சிறுமியின் பிரேதப் பரிசோதனை இன்று இடம்பெற்றது. சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சிறுமியின் தாய் மற்றும் பரிகாரத்தை முன்னெடுத்த பெண்ணும் இன்றைய தினம் மஹர நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்
இவ்விரு பெண்களையும் எதிர்வரும் 12 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்களது மனோநிலையை பரிசீலித்து அறிக்கையொன்றை பெற்றுத்தருமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமானுஷிய சக்தியொன்றை விரட்டுவதாக கூறி அதற்காக சூனியம் செய்யும் போர்வையில் பாத்திமா றிப்கா எனும் சிறுமியை பிரம்பால் அடித்து தாக்கப்பட்டார். சிறுமயின் உடலில் ஒரு வகை தைலத்தை பூசி லைமா பலீடா எனும் பெண் பிரம்பால் கடுமையாக தாக்கியதனால் சுயநினைவிழந்த சிறுமியை பியகம வைத்தியசாலையில் அனுமதித்ததன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளார். இச்சிறுமியின் தாய் மற்றும் சூனியம் செய்த பெண் நேற்றைய தினம் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டனர். மகர நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட இவர்களை எதிர்வரும் 12 ஆந் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இவ்விரு பெண்களின் மனநிலை தொடர்பாக கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறுமியின் பீசீஆர் பரிசோதனை அறிக்கை கிடைத்ததன் பின்னர் மேலதிக மரண விசாரணை இடம்பெறும். சம்பவத்தை நேரில் கண்ட பிரதேசவாசிகள் பலரின் வாக்குமூலங்களும் பெற்றுக்கொண்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். பாத்திமா றிப்கா எனும் சிறுமிக்கு நியாயம் பெற்றுக்கொடுக்குமாறு கோரி பிரதேச வாசிகள் இன்று ஆர்ப்பார்ட்டத்தில் ஈடுபட்டனர்.
