fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை ஹோட்டல் துறை வரலாற்றில் புதிய அத்தியாயம்..

ITN News Editor
By ITN News Editor மார்ச் 1, 2021 18:57

இலங்கை ஹோட்டல் துறை வரலாற்றில் புதிய அத்தியாயம்..

இலங்கையில் ஹோட்டல் துறை வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கும் வகையில் முதலாவது மிதக்கும் கபானா ஹோட்டேல் சுற்றுலா பயணிகளுக்கென விரைவில் திறக்கப்படவுள்ளது. நீர்கொழும்பு போலவத்த பகுதியில் இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. புவிச்சரிதவியல் அகழ்வாராய்ச்சி பணியகத்தின் ஆலோசனைக்கமைய இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதற்கென 500 மில்லியன் ரூபா உள்ளுர் வர்த்தகரான கனும் பெரேரா மற்றும் பிரபல விளையாட்டு வீரர் திலகரட்ன டில்சான் ஆகியோர் இணைந்து முதலீடு செய்துள்ளனர். அனைத்து நிர்மாண பணிகளும் உள்ளுர் பொறியியலாளர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்களைக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

50 அறைகளைக் கொண்ட இந்த ஹோட்டேலில் 10 அறைகள் ஜீ.பீ.எஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீரில் பயணிக்கக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமாலி பெர்ணான்டோ தகவல் தருகையில், இது இலங்கை சுற்றுலாவுக்கு பெருமை சேர்க்க கூடிய திட்டம் என தெரிவித்துள்ளார்.

இந்த ஹோட்டேலின் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைவதற்கு முன்னர் ஊடகங்கள் ஊடாக அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி போன்ற நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்து இதனை பார்வையிட முன்வந்துள்ளனர். இந்த ஹோட்டேலில் மிதக்கும் ஹபானா, மிதக்கும் உணவகம், நீருக்கு கீழ் பொழுதுபோக்கு நிலையங்களும், நீச்சல் தடாகங்களும் அமைந்திருப்பது விசேட அம்சமாகும்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 1, 2021 18:57

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33