குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் குறித்த திணைக்களத்தின் பிணப்பாளராக செயற்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி நிஷாந்த சொய்சா பொலிஸ் தலைமையகத்தின் குற்றவியல் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கமைய நிலவிய வெற்றிடத்திற்கு ரொஹான் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
