பாடசாலை அனுமதியை பெற பல இலட்சம் ரூபா செலவிட்டு பரிந்துரை கடிதங்கள்
Related Articles
பத்து இலட்சம் ரூபாவை செலவிட்டு மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுமதிப்பதற்காக பரிந்துரை கடிதங்கள் பெற்றுக் கொள்ளும் முறையை தற்போதைய அரசாங்கம் மாற்றியமைக்க போவதாக அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். கேகாலை நகர மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதேஅமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
கல்வி சேவைகள் ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய எழுதிய நூல்கள் கேகாலை நகர மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டன. அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் ஊடகவியலாளலர்களும் கலந்து கொண்டனர்.