fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நெற் கொள்வனவு நாடு பூராகவும் வெற்றிகரமாக முன்னெடுப்பு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 11, 2020 15:15

அரசாங்கத்தின் நெற் கொள்வனவு செய்யும் நடவடிக்கை நாடு பூராகவும் வெற்றிகரமாக இடம்பெறுகின்றது. எவ்வித பிரச்சினைகளும் இன்றி தமது அறுவடையை விற்பனை செய்வதற்காக வசதிகளை ஏற்படுத்தி கொடுத்ததையிட்டு விவசாய மக்கள் அரசாங்கத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். வவுனியா அம்பாறை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் இதுவரை கூடுதலான மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெற் சந்தைபப்படுத்தும் சபை தெரிவித்துள்ளது.

நெற் கொள்வனவு செய்யும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் இதுவரை ஒரு இலட்சத்து 13 ஆயிரம் கிலோ நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. நிவாரண அடிப்படையில் உரம் வழங்கியதன் காரணமாக கூடுதலான நெல் அறுவடை கிடைத்ததாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா மாவட்டத்தில் 93 ஆயிரத்து 258 மெட்ரிக் தொன் நெல்அறுவடை எதிர்பார்க்கப்பட்டது. வவுனியா மல்வத்த வீதி மாமடுவ நெடுங்கேணி, மற்றும் வேப்பங்குளம், போன்ற நெற் களஞ்சியசாலைகளில் நெல் கொள்வனவு இடம்பெறுகின்றன.

இதேவேளை அம்பாறை மாவட்டத்திலும் நெற் கொள்வனவு வெற்றிகரமாக இடம்பெறுகின்றது.இதுவரை சுமார் 500 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட செயலாளர் டி. எம். எல். பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த வருடங்களில் அறுவடை கிடைக்கப்பெற்றதுடன் அதனை விற்பனை செய்வதற்காக கூடிய காலம் செலவழிந்த போதிலும் இம்முறை குறுகிய காலத்திற்குள் அறுவடை கொள்வனவு செய்யப்பட்டதன் காரணமாக தமக்கு பாரிய நிவாரணம் கிடைத்துள்ளதாக விவசாய மக்கள் தெரிவித்துள்ளனர். உரிய தரத்திற்கு ஏற்ப நெற் சந்தைப்படுத்’தும் சபைக்கு’ தமது அறுவடையை வழங்க முடிந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 11, 2020 15:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க