கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் அந்நாட்டின் சிரேஷ்ட சுகாதார அதிகாரிகள் ஒரு சிலரை சேவையிலிருந்து நீக்க சீன அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முடியாத நிலையில் காணப்படுவதே இதற்கு காரணம் எனவும் அறிவிக்கப்படுகின்றது.
சீனாவில் ஹூபை மாநிலத்தின் சுகாதார ஆணையாளர் அலுவலகத்தின் செயலாளரும் சுகாதார செயல்பாட்டு பொறுப்பாளரும் இவர்களில் அடங்குகின்றனர். இவர்கள் அரசாங்கத்தின் சிரேஷட அதிகாரிகளாக கருதப்படுகின்றனர்.
நேற்றைய தினத்தில் மாத்திரம் ஹூபை மாநிலத்தில் 103 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து உயிரிழப்புக்களின் எண்ணிக்கை ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதுவரை இவ்வைரஸ் தாக்கத்திற்கு இலக்காகியவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது. இந்நிலைமை காரணமாக எதிர்காலத்தில் மேலும் பல அதிகாரிகள் சேவையிலிருந்து நீக்குவதற்கும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக சீன அரசாங்கம் அறிவிக்கின்றது.
