சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிகிச்சைகளின் பின்னர், நேற்றிரவு சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.
இருதயத்தில் இருந்து வெளியேறும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட வீக்கத்திற்காக ரஜினிகாந்த்துக்கு, அதனை அறுவைச் சிகிச்சை செய்து அகற்றாமல், டிரான்ஸ்கேட்டர் முறையில் இரத்த நாளத்தில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டது.
ஒக்டோபர் 1 ஆம் திகதி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைக்குப் பிறகு, அவர் வைத்தியசாலையில் இரண்டு நாட்கள் கண்காணிப்பில் இருந்தார்.
இந்த நிலையில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்ததால் நேற்றிரவு வைத்தியாசலையில் இருந்து வெளியேறினார்.
எனினும், ரஜினிகாந்தை ஓரிரு வாரங்கள் ஓய்வில் இருக்குமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது உடல் நிலை முன்னேறியவுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கூலி திரைப்படத்தின் பணியை மீண்டும் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது