fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பதவியை ராஜினாமா செய்வதாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே அறிவிப்பு

ITN News Editor
By ITN News Editor மே 24, 2019 18:17

பதவியை ராஜினாமா செய்வதாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே அறிவிப்பு

ஆளும் பழமைவாத கட்சி உறுப்பினர்களே திரேசா மே ஏற்படுத்திய ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை ஆதரிக்காத நிலையில் முன்னர் சில அமைச்சர்கள் அடுத்தடுத்து இராஜினாமா செய்தனர். இதனால் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டுவந்துள்ள திரேசா மே, அடுத்த மாதம் (ஜூன்) 3 ஆம் திகதி நான்காவது முறையாக அந்த ஒப்பந்தத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து 2019 மார்ச் இறுதிக்குள் வெளியேற பிரிட்டன் அரசு முடிவு செய்தது. ஆனால், ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்புடன் பிரிட்டன் பிரதமர் திரேசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.

இதனால் பிரிட்டன் பாராளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் 3 முறை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த வாக்கெடுப்பும் தோல்வியில் முடிந்தால், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து ஒப்பந்தம் இன்றி வெளியேற வேண்டிய நெருக்கடி நிலைக்கு இங்கிலாந்து தள்ளப்படும்.

இந்நிலையில், பழமைவாத (கனசர்வேட்டிவ்) கட்சி தலைவர் பதவியை ஜூன் மாதம் 7 ஆம் திகதி இராஜினாமா செய்வதாக திரேசா மே அறிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மே 24, 2019 18:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க