fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பெரும்போக நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 8, 2020 12:00

பெரும்போக நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை

பெரும்போக நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தும் சபை தெரிவித்துள்ளது. இதற்கென சபைக்கு உட்பட்ட அனைத்து கிளைகளும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தும் சபையின் தலைவர் பு.னு. மானப்பெரும தெரிவித்துள்ளார்.

அரச கொள்கைக்கு அமைவாக பெரும்போகத்தில் நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்து உரிய நேரத்தில் சந்தைக்கு விநியோகிப்பதற்கு சபை எதிர்பார்த்துள்ளது. இந்நிலையில் நெல் சந்தைப்படுத்தும் சபையிடம் சுமார் 3 மெற்றிக் தொன் நெல் கையிருப்பிலுள்ளதுடன், ஏனையவை விநியோகிக்கப்பட்டிருப்பதாகவும் நெல் சந்தைப்படுத்தும் சபை மேலும் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 8, 2020 12:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க