fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

“கிராமத்துடன் கலந்துரையாடல்” மூலம் எதிர்பார்க்கும் நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக ஜனாதிபதி செயலணி

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 10, 2021 11:08

“கிராமத்துடன் கலந்துரையாடல்” மூலம் எதிர்பார்க்கும் நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக ஜனாதிபதி செயலணி

கிராமத்துடன் கலந்துரையாடல்” நிகழ்ச்சியின் மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் நோக்கங்கள், மக்களின் தேவைகளை சிறப்பாகவும் பயனுடையதாகவும் நடைமுறைப்படுத்துவதற்கும் மீள் பரீட்சிப்பதற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதி செயலணி ஒன்றை நியமித்துள்ளார்.

“கிராமத்துடன் கலந்துரையாடல் கிராமிய அபிவிருத்தி ஜனாதிபதி செயலணி” என்று அதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிக்கு இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய 15 பேரைக்கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர்களான நிமல் லன்சா, திலும் அமுனுகம, காஞ்சன விஜேசேகர, சீத்தா அரம்பேபொல, சன்ன ஜயசுமன, பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், கபில அத்துகோரல, சஞ்சீவ எதிரிமான்ன, நிபுன ரணவக்க, சாமர சம்பத் தசநாயக்க, டிரான் அலஸ், கெவிந்து குமாரதுங்க, சிவநேசத்துறை சந்திரகாந்தன், சிந்தக்க அமல் மாயாதுன்னே மற்றும் ஜயந்த வீரசிங்க ஆகியோர் ஏனைய அங்கத்தவர்களாவர்.

ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சந்திமா விக்கிரமசிங்க “கிராமத்துடன் கலந்துரையாடல்” கிராமிய அபிவிருத்தி நடவடிக்கைகள், அதனோடு தொடர்பான அவசியமான அனைத்து தகவல்களையும் வழங்கி தொடர்பாடல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருப்பார்.

“கிராமத்துடன் கலந்துரையாடல்” நிகழ்ச்சியில் மக்கள் முன்வைக்கும் பிரச்சினைகள், சிக்கல்கள் தொடர்பாக ஜனாதிபதி அவர்கள் வழங்கும் பணிப்புரைகள் மற்றும் உத்தரவுகளை உடனடியாக செயற்படுத்துவதற்காக மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் ஏனைய அனைத்து நிறுவனங்களினதும் பிரதானிகள் உட்பட பிரதேச ரீதியாக அனைத்து அதிகாரிகளையும் சேவை முக்கியத்துவத்தின் அடிப்படையில் செயற்பட வைப்பது ஜனாதிபதி செயலணியின் அடிப்படை பொறுப்பாகும்.

பிரதேச சபைகள், பிரதேச செயலாளர் அலுவலகங்களுக்கு உட்பட்ட தேசிய மட்டத்திலான அரசாங்க நிறுவனங்களின் மூலம் 2021 – 2023 வரவுசெலவு திட்டத்தின் நிதி ஒதுக்கீடுகள் மூலம் செயற்படுத்தப்படும் வீதிகள், குடிநீர் வழங்கல், மின்சாரம், தொலைபேசி தொடர்பாடல், விளையாட்டு மைதானங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், தொழிற்கல்வி நிறுவனங்கள், நகர்புற பல்கலைக்கழகங்கள், காணி வழங்குதல், வங்கிகள் மற்றும் நிதி வசதிகள், சந்தைகள், களஞ்சியசாலைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற திட்டங்களை விரைவுபடுத்துவது செயலணியின் பொறுப்பாகும்.

அரச முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் உள்நாட்டு, வெளிநாட்டு நன்கொடைகள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் குறித்த கால எல்லைக்குள் சிறந்த தரத்துடன் விரைவுபடுத்துவது செயலணியின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

எந்தவொரு அரச சேவையாளரும் அல்லது அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் அல்லது ஏனைய நிறுவனங்களின் அதிகாரி ஒருவர் செயலணி பொறுப்பளிக்கும் கடமையை நிறைவேற்றுவதை தாமதப்படுத்தல் அல்லது தவறவிடும் சந்தர்ப்பங்களை தமக்கு அறிவிக்குமாறு செயலணிக்கு ஜனாதிபதி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 10, 2021 11:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க