ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனிக்கா கொரோனா தடுப்பூசியை நாட்டில் அவசர பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ள தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் அனுமதி கிடைத்ததாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே கொவிட் 19 தடுப்பிற்காக ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனிக்கா தடுப்பூசியை இலங்கையில் அவசர பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ள முடியும் என தீரமானிக்கப்பட்டது. இதற்கமைய வெகு விரைவில் இத்தடுப்பூசியை நாட்டில் பயன்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கொவிட் 19 ஒழிப்பதற்கான தடுப்பூசியொன்று அனுமதி வழங்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இத்தடுப்பூசி குறித்து ஆய்வுகளின் முடிவுகள் கிடைத்த பின் அது குறித்து ஆராயப்பட்டே இதற்குரிய சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. சுகாதாரத் துறையினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்புக் குறித்து நாம் கூடிய கவனம் செலுத்துகின்றோம். இது குறித்து ஆராய்வதற்கென ஒரு சில நாட்கள் சென்றன. எஸ்ட்ரா செனிக்கா தடுப்பூசிக்கு மேலதிகமாக மேலும் ஒரு சில தடுப்பூசிகளுக்கான கோரிக்கைகள் கிடைத்துள்ளன. அதற்கு தேவையான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம். தடுப்பூசியை வழங்குவதற்கான சகல வசதிகளையும் பயிற்சிகளையும் வழங்க தற்போது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
