fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிளாஸ்ரிக்கை போன்று பொலித்தீன்களால் தயாரிக்கப்படுகின்ற 5 உற்பத்திகளை தடைசெய்யும் வர்த்தமானி

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 22, 2021 15:16

பிளாஸ்ரிக்கை போன்று பொலித்தீன்களால் தயாரிக்கப்படுகின்ற 5 உற்பத்திகளை தடைசெய்யும் வர்த்தமானி பத்திரத்தில் சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர கைச்சாத்திட்டார்.

20 மைக்ரோனுக்கும் குறைந்த லஞ்சீட் பிளாஸ்ரிக் போத்தல்கள், செஷே பக்கட்டுக்கள், வீதியோரங்களில் விற்பனை செய்யப்படுகின்ற வாயு நிரப்பப்பட்ட விளையாட்டுப் பொருட்கள் போன்றன இதன் கீழ் தடை செய்யப்படும். வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இவற்றை விற்பனை செய்வது தடை செய்யப்படுமென ஊடக சந்திப்பின் போது வலியுறுத்தப்பட்டது.

“ஏப்ரல் மாதம் முதல் சகல பிளாஸ்டிக் பொலித்தீன் பயன்பாடுகள் தடைசெய்யப்படுகின்றன. நாம் கட்டம் கட்டமாக சுற்றாடலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை சுற்றாடலிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்போம். இதன் போது உணவு மற்றும் ஒளடதங்களுக்காக பயன்படுத்தப்படுகின்ற பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனை தடைசெய்ய இதுவரை எவ்வித தீர்மானங்களும் இல்லை. கிரமமாக சில காலம் சென்று இதற்கும் நடவடிக்கை எடுப்போம்.
சேருவாவில தங்கச் சுரங்கம் குறித்து கடந்த நாட்களில் ஊடகங்கள் மூலம் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்தும் இவ்ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது”.

சேருவாவில தங்கம், செம்பு சுரங்கம் குறித்து அறிவியல் பூர்வமான ஆய்வொன்றை நடாத்த திட்டமிட்டுள்ளோம். இக்குழுவின் தலைமைத்துவத்திற்கு எமது அமைச்சின் மேலதிக செயலாளரை நியமிக்க எதிர்பார்த்துள்ளோம். எமது நிலத்திற்கு கீழுள்ள சகல வளங்களையும் சுற்றாடலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் மீட்டெடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் வகுக்கப்படும். இவ்வாறு எடுக்கப்படும் செம்பாக இருக்கட்டும் இரும்பாக இருக்கட்டும் தங்கமாக இருக்கட்டும் இவையனைத்தும் எமது நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் பெறுமதி சேர்க்கப்பட்டு அதனை பயன்படுத்துவ குறித்து நாம் கூடிய கவனம் செலுத்தியுள்ளோம்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 22, 2021 15:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க