நான்கு மாவட்டங்களுக்கு 2ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை
Related Articles
நான்கு மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை நாளை காலை 6 மணி வரை அமுலில் இருக்கும்.
களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய பிரதேச செயலகப் பகுதி, மாத்தறை மாவட்டத்தில் பிடபெத்தர மற்றும் கொட்டபொல பிரதேச செயலகப் பகுதிகள், கண்டி மாவட்டத்தில் பஸ்பாகேகோரலை இங்கிரிய பிரதேச செயலகப் பகுதி மற்றும் இரத்தினபுரி மாவட்டம் இரத்தினபுரி பிரதேச செயலகப் பகுதி ஆகியவற்றில் வசிப்பவர்களுக்கு 2 ஆம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக NBRO தெரிவித்துள்ளது.
மேலும், ஆறு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.