உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை இந்தியாவில் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் இமாச்சல் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோதி அங்குரார்ப்பணம் செய்துவைத்துள்ளார். மாநிலத்தின் மணாலி பகுதியிலிருந்து லஹால்; ஸ்பிடி பள்ளத்தாக்கு ஊடாக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. 9.2 கிலோ மீற்றர் நீளத்தைக் கொண்ட சுரங்கப்பாதையூடாக எந்தவொரு காலநிலையின்போதும் பயணிக்கமுடியுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து மூவாயிரம் மீற்றர் உயரத்தில், அதிநவீன வசதிகளுடன், இரு வழி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் சுரங்கப்பாதையை அமைப்பதற்கு கடந்த 2000ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. எனினும் ஆட்சி மாற்றங்கள் காரணமாக திட்டத்தை தொடர்வதற்கான பணிகள் கைவிடப்பட்டன.
இந்நிலையில் இமாச்சல் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த நெடுஞ்சாலை சுரங்கப்பாதைக்கு அடல் சுரங்கப்பாதை என பெயரிடப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வில் மத்திய அரசாங்கத்தின் மக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
