கொரியாவிலுள்ள இலங்கையர்களுக்காக 24 மணி நேர தொலைபேசி இலக்கங்கள் 3 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இலங்கையர்களின் சுகாதார நிலைமை தொடர்பில் தென்கொரியாவிலுள்ள இலங்கை தூதரகம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. தென்கொரியாவிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்படின் 0082 27 35 29 66 அல்லது 0082 27 35 29 67 அல்லது 0082 27 35 29 68 ஆகிய இலக்கங்கள் ஊடாக தொடர்புகொள்ள முடியும்.
இதேவேளை முன்வைக்கப்படும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்க தென்கொரியாவிலுள்ள இலங்கை தூதரகம் தயாராகவுள்ளது. இதேவேளை தென்கொரியாவிலுள்ள இலங்கையர்கள் எவருக்கும் கொரோன வைரஸ் தொற்று ஏற்படவில்லையென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
