கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஒன்றரை கோடி மக்கள் உயிரிழக்ககூடுமென ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. வைரஸ் தாக்கம் வேகமாக பரவுகின்றது. அதை கட்டுப்படுத்த தவறின் மோசமான விளைவுகள் ஏற்படுமென ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். உலகில் 50 இற்கு மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதுவரை 3 ஆயிரத்து 400 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளர். தினமும் புதிதாக 2500 இற்கு மேற்பட்ட நோயாளர்கள் பாதிக்கப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவை அடுத்து ஈரான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் காணப்படுகின்றது. ஈரானில் அந்நாட்டு உப ஜனாதிபதி, சுகாதார துறை பிரதி அமைச்சர் உட்பட மேலும் 23 பாராளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். ஈரான் வெளிவிவகார அமைச்சரின் ஆலோசகரும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.