IPL கிரிக்கட் தொடரில் இன்று இரு போட்டிகள் இடம்பெறவுள்ளன. இன்று இடம்பெறவுள்ள 15 ஆவது போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இலங்கை நேரப்படி பிற்பகல் 03.30 க்கு போட்டி ஆரம்பமாகும். தொடரில் இரு அணிகளும் இதுவரை தலா 3 போட்டிகளுக்கு முகங்கொடுத்துள்ளதுடன், ஒரு வெற்றியை மாத்திரமே இரு அணிகளும் பதிவுசெய்துள்ளன.
இந்நிலையில் இன்று இடம்பெறவுள்ள 16 ஆவது போட்டியில் டெல்லி கெப்பிட்டஸ்ல் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. தொடரில் இரு வெற்றிகளை பதிவுசெய்துள்ள டெல்லி கெப்பிட்டல்ஸ் புள்ளிப்பட்டியலில் இரண்டாமிடத்திலுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4 புள்ளிகளுடன் 3ம் இடத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
