நியூசிலாந்து பொதுத்தேர்தலில் முதற்கட்ட வாக்கெடுப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளன. அந்நாட்டு தொழிற்கட்சி தலைவரும், பிரதமருமான ஜெசிந்த ஆர்டன் இரண்டாவது முறையாகவும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் தேர்தலில் போட்டியிடுகின்றார். கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் பணியில் நியூசிலாந்து வெற்றியடைந்துள்ளது. இதனால் ஜெசிந்தா ஆர்டன் தலைமையிலான அரசாங்கம் மீண்டும் ஆட்சிபீடம் ஏறுவதற்கு வாய்ப்புக்கள் அதிகமென அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். தேர்தலுக்கென 450 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலின் இறுதிக்கட்ட வாக்கெடுப்பு எதிர்வரும் 17ம் திகதி இடம்பெறவுள்ளது. அமைதியான முறையில் தேர்தல் வாக்கெடுப்பு பணிகள் இடம்பெறுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் வாக்கெடுப்பு இடம்பெறுமெனவும், மக்கள் அதனை கவனத்திற்கொண்டு தமது வாக்குகளை செலுத்த முன்வரவேண்டுமெனவும் பிரதமர் ஜெசிந்த ஆர்டன் அறிவுறுத்தியுள்ளார்.
