பிரதமர் இன்றைய தினம் நிதி அமைச்சின் கடமைகளை ஆரம்பித்தார்..
Related Articles
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்றைய தினம் நிதி அமைச்சின் கடமைகளை ஆரம்பித்தார். மேலும் சில அமைச்சர்களும் இன்றைய தினம் தமது ஆரம்பித்தனர்.
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சின் கடமைகளை இன்றைய தினம் நிதியமைச்சின் வளாகத்தில் ஆரம்பித்தார். மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் பிரதமரின் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இடம்பெற்றத. குறித்த நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இதேவேளை கைத்தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச இன்றைய தினம் தனது அமைச்சுக்கான கடமைகளை ஆரம்பித்தார் கொள்ளுப்பிட்டியிலுள்ள அமைச்சில் அது தொடர்பிலான நிகழ்வு இடம்பெற்றது.
“இந்த நாட்டின் தேசிய கைத்தொழில்கள், கைத்தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க வேண்டிய பொறுப்பு நீண்டகாலமாகவே காணப்படுகின்றது. அவர்களை ஊக்குவிப்பதற்கான கொள்கை ரீதியிலான பின்புலம் தற்போது உருவாகியுள்ளது. இந்த நாட்டில் உற்பத்தி செய்ய கூடிய பொருட்களை உற்பத்தி செய்வது அதனை பயன்படுத்து என்ற கொள்கைக்கு அமைய கைத்தொழில்துறை அமைச்சு தேசிய கைத்தொழிலாளர்களின் அபிமானமிக்க யுகத்தை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயல்படும். இந்த நாட்டின் கைத்தொழிலாளர்கள் தமிழ், சிங்களம், முஸலிம் எந்த மதமாக இருக்கலாம் அதனை ஊக்கப்படுத்த அரசாங்கத்தின் கீழுள்ள கைத்தொழிற்சாலைகளை மீள திறப்பதற்கும் கைத்தொழிலாளர்களுக்கு பொருத்தமான சந்தைவாய்ப்பை பெற்றுக் கொடுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை நாம் முன்னெடுப்போம். கௌரவ ஜனாதிபதி வழங்கியுள்ள அதிகாரங்களுக்கு அமைய சகல நடவடிக்கைகளை முன்னெடுக்க நாம் தயாராகவுள்ளோம் ஏற்கனவே காணப்பட்ட கசப்பான விடயங்களை மறந்துவிடு முன்வருமாறு இந்த நாட்டிலுள்ள சகல தொழில்துறையினருக்கும் நான் அழைப்புவிடுக்கின்றேன். புதிய எண்ணத்துடன் புதிய உத்வேகத்தோடு எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள். “
சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு கிராமிய ஆயூர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி இன்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்றார். மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வுஇடம்பெற்றது.
“அழகு கலை தொடர்பிலான துறையின் தேசிய ரீதியிலான விடயங்களுக்கு முன்னரிமைவவழங்கி நாம் செயல்பட வேண்டும். எமது நாடடின் உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவித்து எமது நாட்டுக்கு பொருத்தமான அழகு கலை உற்பத்திகளை மேம்படுத்தும் வேலைத்திட்டம் குறித்து அவதானம் செலுத்தப்படும். தேசிய ரீதியாக எமது அடையாளத்தை பாதுகாத்து எதிர்கால சந்திக்கு பெற்றுக் கொடுப்பதே எமது பொறுப்பு”