போதைப்பொருள் வர்த்தகர்களோடு தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு தேடப்பட்டுவந்த பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் வசந்தகுமார இன்று கடவத்தை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரை மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்படுத்தியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவில் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் சந்தேக நபராக இனங்காணப்பட்ட அவர் கடந்த சில தினங்களாக தலைமறைவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேடப்பட்டுவந்த பொலிஸ் பரிசோதகர் பொலிஸில் சரணடைந்துள்ளார்..
படிக்க 0 நிமிடங்கள்