fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜமாத்தே மில்லது இப்ராஹிம் அமைப்பின் 11 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 11, 2019 12:46

ஜமாத்தே மில்லது இப்ராஹிம் அமைப்பின் 11 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு

ஜமாதே மில்லது இப்ராஹிம் அமைப்பின் கைதுசெய்யப்பட்ட 11 உறுப்பினர்கள் மேலதிக விசாரணைக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் அம்பாறை பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று குறித்த நபர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். அரச புலனாய்வு பிரிவு தகவல் வழங்கியதை அடுத்து அம்பாறை பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 11, 2019 12:46

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க