உகண – நவகிரிய வாவியில் படகு ஒன்று கவிழ்ததில் 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குடும்பமொன்று வாவியில் நீராடுவதற்கென சென்றிருந்த நிலையில், 6 பிள்ளைகள் பொழுபோக்குக்கென படகில் சென்றுள்ளனர். இந்நிலையில், படகு திடீரென கவிழ்ந்துள்ளது.
தூரிதமாக செயற்பட்ட அங்கியிருந்த மக்கள் ஐவரை மீட்டுள்ளனர். எனினும் 8 வயது சிறுவனை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
