அரசின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் சந்தைக்கு அரிசியை விநியோகிக்க பாரியளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
ஜனாதிபதி நாட்டிற்குள் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இன்று முதல் அனைத்து அரிசி வகைகளையும் அரசின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் சந்தைக்கு விநியோகிக்க தீர்மானித்துள்ளதாக அரலிய கூட்டுறவு வர்த்தக தலைவர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நிபுண மற்றும் நிவ் ரத்ன வர்த்தக தலைவர்களுடன் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். இதற்கமைய இன்று முதல் அரசின் கட்டுப்பாட்டு விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வகையில் எமது அரிசியை விநியோகிக்க தீர்மானித்துள்ளதாக டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் திகதி வரை இந்த ஒத்துழைப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.