கட்டுநாயக்க புதிய பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆய்வுகூட தொகுதி பிரதமரினால் திறப்பு
Related Articles
கட்டுநாயக்க புதிய பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆய்வுகூட தொகுதி இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
10 மில்லியன் யூரோ அவுஸ்திரேலிய சலுகை கடன் திட்டத்தின் கீழ் இவ்வாய்வுகூட தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. புதிய ஆய்வுகூடம் திறந்து வைக்கப்படுவதன் மூலம் இங்கு 500 மாணவர்களுக்கு சமகாலத்தில் கல்வியை தொடர முடியும். 2020ம் ஆண்டு முதல் இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களுக்கு இலங்கை பொறியியல் நிறுவனத்தின் அங்கீகாரத்துடன் பொறியியல் துறை பட்டங்கள் இங்கு வழங்கப்படவுள்ளன. சிட்னி உடன்படிக்கைக்கு ஏற்ப சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் பட்டமாக இதனை முன்னெடுத்துச்செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் ஏற்பட்டு வரும் கைத்தொழில் புத்தெழுச்சியினால் பெருமளவு தொழில் வாய்ப்புக்களுக்கான வெற்றிடங்கள் ஏற்பட்டு வருகின்றன. நாட்டுக்கு தேவையான பொறியியல் பட்டதாரிகளை உருவாக்குவதற்கு பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம் இடமளிக்கும் என்றும் பிரதமர் அங்கு தெரிவித்தார்.
இதேநேரம் கம்பஹா பஹலயாகொட புதிய தொழிற்பயிற்சி நிறுவனம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் உதவி திட்டத்தின் கீழ் புதிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இத்திட்டத்தின் கீழ் இத்தொழிற்பயிற்சி நிலையம் நிர்மாணிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.