தற்போது காணப்படுகின்ற கடும் வெப்பத்துடன் கூடிய காலநிலை குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென சுகாதார பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று, நாளை மற்றும் நாளை மறுதினங்களில் மனித உடலால் உணரக்கூடிய கடும் வெப்பம் நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது.
அதற்கமைய முடிந்தளவு நீரை பருகுமாறும், நிழலான இடங்களில் வசிக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதிகளவில் வியர்க்கும் செயற்பாடுகளில் ஈடுபடல், திறந்த வாகனங்களில் பயணித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளை தவிர்ப்பது மிக முக்கியமென சுகாதார பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிப்பெண்கள் குறித்த வெப்பமான காலநிலையின்போது விசேட கவனம் செலுத்தி செயற்படவேண்டுமென சுகாதார பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.