fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடன் கூடிய வானிலை

ITN News Editor
By ITN News Editor ஜூன் 13, 2020 16:24

நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடன் கூடிய வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒருசில பகுதிகளில் 75 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகலாமென எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப்பகுதிகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டின் சூழவுள்ள கடற்பிராந்தியங்களிலும் காற்றின் வேகம் அதிகரித்து வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனால் மீனவ சமூகம் அவதானத்துடன் இருக்கவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 13, 2020 16:24

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo