கடன் வழங்கும் போது வர்த்தக வங்கி அறவிடும் வட்டி மதிப்பீட்டை குறைப்பதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பான அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கை நாளைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படுமென இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கென நியமிக்கப்பட்டுள்ள குழுவின் ஊடாக பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன. சிறிய மற்றும் மத்தியதர தொழில் முயற்சியாளர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே திட்டத்தின் பிராதான நோக்கமாகும்.
