fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 29, 2018 14:01

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. மின்டானோ தீவில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கடியில் 59 கிலோ மீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் உருவாகியுள்ளது. பிலிப்பைன்ஸ் அமைந்துள்ள பசுபிக் கடற்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸிலிருந்து 300 கிலோ மீற்றர் தொலைவில் காணப்படும் இந்தோனேஷிய கடற்பகுதியிலும் சுனாமி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை நிலநடுக்கத்தினால் கட்டடங்கள் கடுமையாக குலுங்கியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 29, 2018 14:01

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க