தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னெடுக்க சுகாதார அமைச்சு தீரமானித்துள்ளது. எதிர்வரும் 11 ம் திகதி முதல் 17 ம் திகதி வரை தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படும். நாட்டிலுள்ள அனைத்து பிரதேசங்களிலும் டெங்கு ஒழிப்பு பணிகள் முன்னெடுக்கப்படும்.
பொலிஸ் மற்றும் கடற்படையின் ஒத்துழைப்புடன் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. டெங்கு ஒழிப்பு வாரத்தில் பொதுமக்களும் தமது பங்களிப்பை வழங்கவேண்டுமென தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
