இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நிவ்யோர்க் சென்றுள்ள இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
வர்த்தகம், பொருளாதார உறவுகள், முதலீடுகள் தொடர்பில் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பாதுகாப்பு விவகாரம் தொடர்பிலும் முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதேவேளை அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் இந்திய பிரதமர் , ஈரான் ஜனாதிபதியை சந்தித்தமை உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
