87 மில்லியன் பேஸ்புக் பாவனையாளர்களின் தகவல்களை முறையற்ற விதத்தில் பெற்று கொண்டதாக குற்றம் சுமத்தி பேஸ் புக் நிறுவனத்திற்கு ஐந்து பில்லியன் அமெரிக்க டொலரை அபராதமாக விதிக்க அமெரிக்காவின் சட்ட வகுப்பாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
அமெரிக்க மத்திய வர்த்தக ஆணைக்குழுவினால் பேஸ்புக் நிறுவனத்தின் பாவனையாளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் எனலிட்டிக்கா நிறுவனத்திற்கு வழங்கியமை தொடர்பாக கடந்த ஆண்டில் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டது. இவ்விசாரணைகளை தொடர்ந்தே இவ்வபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய வர்த்தக ஆணைக்குழுவின் மூன்றில் இரண்டு வாக்குகளினால் இதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
