ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்கு ஐரோப்பிய சங்கத்திலிருந்து 100 பேர்
Related Articles
ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக நூற்றுக்கும் கூடுதலான ஐரோப்பிய சங்க பிரதிநிதிகள் வருகை தரவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
தேர்தல் கண்காணிப்பாளர்களில் ஒரு குழுவினர் இன்றைய தினம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வருகை தருவதாக அறிவித்துள்ளதாக அவ்வாணைக்குழு தெரிவிக்கின்றது. பொதுநலவாய நாடுகளை சேர்ந்த 20 கண்காணிப்பாளர்களும் ஐரோப்பிய சங்கத்தின் 60 கண்காணிப்பாளர்களும் சார்க் நாடுககளை சேர்ந்த 25 பிரதிநிதிகளும் தற்போத இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நடைபெறுகின்ற பிரசார செயல்பாடுகள் மற்றும் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான நாட்டின் நிலைமைகள் குறித்து இவ்வெளிநாட்டு பிரதிநிதிகள் கண்காணிக்க உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.