திகன மற்றும் மெனிக்கின்ன ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இன்று (23) காலை 8.30 மணி முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை 48 மணித்தியாலங்களுக்கு இந்த நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இந்த நீர் விநியோகத் தடை விதிக்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
