வேலைவாய்ப்புகளுக்கென சென்று வெளிநாடுகளில் தங்கியிருந்த இலங்கையர்கள் 149 பேர் இன்று காலை தாயகம் திரும்பினர். 4 விமானங்களின் ஊடாக அவர்கள் அழைத்துவரப்பட்டன. ஐக்கிய அரபு அமீர் இராச்சியம், ஜேர்மன் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் இருந்து அவர்கள் வருகை தந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
அவர்கள் பீ.சி.ஆர் பரிசோதனைகளின் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்தார்.
