கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்களை வெற்றி கொள்வதற்கு ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார பொதிக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டது.
[ot-video type=”youtube” url=”https://www.youtube.com/watch?v=_uSBf_WCeGA&feature=youtu.be&fbclid=IwAR1zq80H-r3f2JjWm-r4XVHEvtxocK_5ZXjIA0Tw_mP-gYSFCvx-iWWO2U0″]
(உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கம் காரணமாக இலங்கை பொருளாதார துறையில் ஏற்பட்டுள்ள தாக்கம் தொடர்பில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் முதலீடுகளை பாதுகாக்கும் புதிய பொருளாதார பொதியொன்றை அறிமுகப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கிகாரம் கிடைத்துள்ளது. இதன் காரணமாக நிலுவை மருந்து கட்டணங்களை செலுத்துவதற்காக 10 பில்லியன் ரூபா நேற்று ஒதுக்கப்பட்டது. விவசாய துறையும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அதனால் உரம் இறக்குமதி செய்வோரின் கட்டணங்களை செலுத்துவதற்கு 3 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. கட்டிட நிர்மாண துறையில் சிறிய மற்றும் நடுத்தரளவிலான ஒப்பந்தக்காரர்களுக்கு கொடுப்பனவை வழங்குவதற்காக 5 பில்லியன் ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சிரேஷ்ட பிரஜைகளின் வட்டிநிவாரணத்தை வழங்குவதற்காக 46 பில்லியன் ரூபாவை வங்கிகளுக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவிற்கும் அவ்வாணைக்குழுவின் தலைவருக்கும் தேவையான நிதியை எவ்வித தட்டுப்பாடும் இன்றி வழங்குவதற்காக 8 பில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா, ஆடை ஏற்றுமதி துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, தகவல் தொழில்நுட்ப கைத்தொழில் துறை மற்றும் சிறிய அளவிலான வர்த்தக துறை உள்ளிட்ட 5 துறைகளுக்கு கொரோனா வைரஸினால் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டது. அதனால் இத்துறைக்கு நிவாரணம் வழங்குவதற்காக பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இவர்கள் தமது கடனை வழங்குவதற்கு 6 மாத காலவகாசம் வழங்கப்படும். அன்றாட தமது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக நு{ற்றுக்கு 4 வீத வட்டியில் தமது வங்கிகள் மூலம் கடனை பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வங்கிகளுக்கு மத்திய வங்கி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அன்றாட வருமானத்தை அடிப்படையாக வைத்து பிளைப்பு நடத்தும் வறிய குடும்பங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாமென அறிவித்ததால் அவர்களுக்குஅழுத்தங்கள் ஏற்பட்டன. இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியும் அரசாங்கமும் துறைசார் அதிகாரிகளும் விசேட அவதானம் செலுத்தி வருகின்றனர். )
